மூன்று நாள் கண்காட்சியில் ஸான் னித்தியமான சாளக்கிராமங்கள் மற்றும் பாரம்பரிய ஆன்மீகப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன
சேலம், 03 டிசம்பர் 2025 – கோயம்புத்தூரில் நடத்திய சாளக்கிராமக் கண்காட்சியின் மகத்தான வெற்றிக்குப் பிறகு, ஆன்மீக மற்றும் கலாச்சாரப் பொருட்களுக்கான இந்தியாவின் முன்னணி சில்லறை விற்பனையாளரான GIRI, புதிய வணிக உத் தியுடனும் நிலையான பிராண்ட்டுடனும் அதன் 2வது சாளக்கிராமக் கண்காட்சி-விற்பனையை சேலத்தில் தொடங்கத் தயாராக உள்ளது. இந்த பிரத்யேகமான மூன்று நாள் ஆன்மீக நிகழ்வு டிசம்பர் 05 முதல் 07, 2025 வரை சேலத்தில் உள்ள GIRI ஷோரூம், முதல் அக்ரஹாரம் சாலையில் நடைபெற உள்ளது. ஸான்னி த்தியம் பெற்ற சாளக்கிராமங்களை நம்பகமான முறையில் பக்தர்களுக்கு வழங்குவதையும், அவற்றின் ஆழமான ஆன்மீக முக்கியத்துவம் குறித்த கூடுதல் நுண்ணறிவை அளிப்பதையும் இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த சாளக்கிராம தரிசனக் கண்காட்சிக்கு வரும் அன்பர்கள், அந்த சான்னித்தியத்தை புரிந்து கொள்வதற்கும், உணர்ந்து கொள்வதற்கும் ஒரு வாய்ப்பாக அமைவதோடு, தங்கள் இல்லம் தெய்வீகமாகவும், பாதுகாப்புடனும் திகழவும் இந்த தெய்வதிருவுருவ சின்னங்களை தங்கள் இல்லத்திற்கு வாங்கிச் செல்கின்றனர். மஹா விஷ்ணுவின் அம்சமான இந்த சாளக் கிராமங்கள் இந்துக்களின் பாரம்பரிய வழிபாட்டில் முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளன.
இந்தச் சந்தர்ப்பத்தில் திருமதி. சாரதா பிரகாஷ் பேசுகையில், கிரி பல தலைமுறைகளாக, பக்தர்களை உண்மையான ஆன்மீக பாரம்பரியத்துடன் இணைக்கும் பாலமாக இருந்து வருகிறது. சேலத்தில் நடைபெறும் சாளக்கிராமக் கண்காட்சி அந்த புனிதமான செயல்களி ன் தொடர்ச்சியாகும். ஒரு சாளக்கிராம மூர்த்தியை வாங்குவது என்பது ஒரு தனிப்பட்ட மற்றும் ஆழ்ந்த நம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதை நாங்கள் அறிவோம். அதை மனதில் கொண்டு அங்கீகாரம் பெற்ற, உண்மையான வடிவங்களை நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் வழங்கி வருகிறோம். இது எங்களுடன் நம்பிக்கையோடு பயணிக்கும் அன்பர்களுக்கு நிச்சயமாக திருப்தியை அளிப்பதோடு மஹா விஷ்ணுவின் அருள் அவர்களுக்கு பரிபூரண மாகக் கிட்டும் என்பதை உறுதி கூறுகிறோம்.
சேலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிக்கும் ஆன்மீக அன்பர்கள் அனைவரும் இந்த தெய்வீகமான நிகழ் வில் பங்கு கொண்டு சக்தி வாய்ந்த, பாரம்பரிய மற்றும் மான புராதன நிகழ்வுகளில் எங்களுடன் இணைந்திருக்க வேண்டுகிறோம்.
கிரியைப் பற்றி
GIRI 1951 முதல் நம்பகமான பிராண்டுகளில் ஒன்றாக மாறியுள்ளது, இந்தியாவில் ஆன்மீகப் பொருட்களின் தயாரிப்புகளின் முதன்மையான சில்லறை விற்பனையாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. அதன் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு பெயர் பெற்ற கிரி, பல்வேறு வகையான புத்தகங்கள், இசை, பூஜை அத்தியாவசியப் பொருட்கள், சிலைகள், இந்திய விழாக்கால பொருட்கள், ஆர்கானிக் உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய உடைகளை வழங்குகிறது. அதன் 70+ ஆண்டுகால சேவையில், கிரி தனது வாடிக்கையாளர்களின் ஆன்மீகத் தேவைகளை தொடர்ந்து பூர்த்தி செய்து வருகிறது.
தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி, மகாராஷ்டிரா, புது தில்லி போன்ற இந்திய மாநிலங்களில் 36 ஷோரூம்களுடன் மற்றும் அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளிலும் உலகளாவிய இருப்பைப் பேணுகிறது.
GIRI இன் சிறப்பம்சம் பல மதிப்புமிக்க பாராட்டுகளுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, அவற்றில் அடங்கும்: 2025 இல் – இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் (RAI) வழங்கிய இந்திய சில்லறை விற்பனை சிறப்பு விருதுகளில் ‘சிறப்பு சில்லறை விற்பனையாளர் விருது பெற்றதும், 2024 பெண்கள் தொழில் முனைவோருக்காக FICCI விருது மற்றும் 2019 இல் தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலா நட்பு ஷாப்பிங் மையம் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளது.

