அந்த இசை மேதைக்கும் அவரது நீடித்த இசைப் பங்களிப்பிற்கும் மரியாதை செலுத்தும் விதமாக இந்த நான்கு புத்தகங்களை கிரி வெளியிடுகிறது.
சென்னை, 15th டிசம்பர், 2025: ஆன்மீகம் மற்றும் கலாச்சாரப் பொருட்கள் விற்பனையில் இந்தியாவின் முன்னணி சில்லறை வணிக நிறுவனமான GIRI, மதுரை ஸ்ரீ ஜி. எஸ். மணி அவர்களின் தென்னவன் இசைத் தமிழ், ராஜபூஜித லாவண்யமு, ராஜபூஜித ஸ்வர்ணம், மற்றும் ஜதிஸ்வரங்கள் என்ற தலைப்பிலான இந்த நூல்கள், டாக்டர் உஷா பிரசாத் அவர்களால் தொகுக்கப்பட்டு, ஸ்வரப்படுத்தப்பட்டு, GIRI பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நூல் வெளியீட்டு விழா மயிலாப்பூரில் உள்ள லட்சுமி கிரி கன்வென்ஷன் ஹாலில் நடைபெற்றது.
கர்நாடக சங்கீத இலக்கியத்திற்கான இந்த குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கொண்டாட, பல புகழ்பெற்ற ஆளுமைகள் இந்த வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நான்கு புத்தகங்களையும், தலைமை விருந்தினர், பத்ம பூஷன் விருது பெற்றவரும், சங்கீத கலாநிதி பட்டம் பெற்றவருமான ஸ்ரீ டி. வி. கோபாலகிருஷ்ணன் அவர்கள் முறையாக வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் பத்மஸ்ரீ மற்றும் சங்கீத கலாநிதி ஏ. கன்யாகுமரி, தமிழறிஞர் மற்றும் எழுத்தாளர் வா. வே. சுப்ரமணியம், வீணை கலைஞர் டாக்டர் ஆர். எஸ். ஜெயலட்சுமி, இசையமைப்பாளர் வித்யாசாகர் மற்றும் திரைப்பட இயக்குநர் ராஜீவ் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
டாக்டர் உஷா பிரசாத்தின் இந்தப் பணி, ஸ்ரீ ஜி. எஸ். மணியின் பல்வேறு இசைப் பங்களிப்புகளுக்கு ஒரு விரிவான மற்றும் எளிதில் அணுகக்கூடிய வழிகாட்டியாக அமைந்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆக்கங்கள் முதல் வர்ணங்கள், தில்லானாக்கள் மற்றும் ஜதிஸ்வரங்கள் போன்ற சிக்கலான விஷயங்களையும் இந்த வெளியீடுகள் துல்லியமாக விவரிக்கின்றன. இந்த நூல்கள் கலைஞர்கள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு இன்றியமையாத வளங்களாக ஒரு விவரப் பெட்டகமாக இருக்கும்
இந்நிகழ்ச்சியில் பேசிய GIRI பதிப்பகத்தின் இயக்குநர் திரு. ராமநா ராயணன் அவர்கள், “மதுரை ஸ்ரீ ஜி. எஸ். மணியின் கலைத்திறனின் ஆழத்தையும், தனித்துவத்தையும் படம் பிடித்துக் காட்டும் இந்தச் சிறப்பான தொகுப்புகளை வெளியிடுவதில் GIRI பதிப்பகம் மிகுந்த பெருமை கொள்கிறது. டாக்டர் உஷா பிரசாத் அவர்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. கூட்டியுள்ளார். இந்தப் புத்தகங்கள் வருங்கால தலைமுறை மாணவர்களுக்கு வழிகாட்டிகளாக அமையும்” என்று கூறினார்.
இந்தத் புத்தகங்கள் நாடு முழுவதும் வெளியிடப்பட்டுள்ளன, மேலும் இவை அனைத்து GIRI யின் அனைத்து கிளைகள் மற்றும் ஆன்லைன் தளமான – www.giri.in மூலமும் கிடைக்கும்.
கிரியைப் பற்றி
GIRI 1951 முதல் நம்பகமான பிராண்டுகளில் ஒன்றாக மாறியுள்ளது, இந்தியாவில் ஆன்மீகப் பொருட்களின் தயாரிப்புகளின் முதன்மையான சில்லறை விற்பனையாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. அதன் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு பெயர் பெற்ற கிரி, பல்வேறு வகையான புத்தகங்கள், இசை, பூஜை அத்தியாவசியப் பொருட்கள், சிலைகள், இந்திய விழாக்கால பொருட்கள், ஆர்கானிக் உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய உடைகளை வழங்குகிறது. அதன் 70+ ஆண்டுகால சேவையில், கிரி தனது வாடிக்கையாளர்களின் ஆன்மீகத் தேவைகளை தொடர்ந்து பூர்த்தி செய்து வருகிறது.
தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி, மகாராஷ்டிரா, புது தில்லி போன்ற இந்திய மாநிலங்களில் 36 ஷோரூம்களுடன் மற்றும் அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளிலும் உலகளாவிய இருப்பைப் பேணுகிறது.
GIRI இன் சிறப்பம்சம் பல மதிப்புமிக்க பாராட்டுகளுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, அவற்றில் அடங்கும்: 2025 இல் – இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் (RAI) வழங்கிய இந்திய சில்லறை விற்பனை சிறப்பு விருதுகளில் ‘சிறப்பு சில்லறை விற்பனையாளர் விருது பெற்றதும், 2024 பெண்கள் தொழில் முனைவோருக்காக FICCI விருது மற்றும் 2019 இல் தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலா நட்பு ஷாப்பிங் மையம் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளது.
மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ளவும்: கிரி

